ஆப்பிள் சாதனங்களில் Google Drive பயன்படுத்துபவரா நீங்கள்?

ஆப்பிள் நிறுவனமானது எப்போதும் தனது சாதனங்களில் உயர்ந்த பட்ச பாதுகாப்பினை வழங்கிவருகின்றது.

இதனால் இலகுவில் அச் சாதனங்களை ஹேக் செய்ய முடியாதிருப்பதுடன், தகவல்கள் கசிவதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

இப்படியான நிலையில் iOS சாதனங்களில் பயன்படுத்தப்படும் Google Drive அப்பிளிக்கேஷனின் பாதுகாப்பினை தற்போது மேலும் அதிகரித்துள்ளது.

கோப்புக்களை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் இந்த அப்பிளிக்கேஷனின் பாதுகாப்பினை FaceID, Passcode அல்லது TouchID என்பவற்றினைக் கொண்டு அதிகரிக்கக்கூடிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

இவ் வசதியானது Privacy Screen என அழைக்கப்படுகின்றது.

மேலும் இதனை iOS சாதனங்களில் மாத்திரமன்றி iPadOS சாதனங்களிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் வசதியினைப் பெறுவதற்கு புதிய Google Drive பதிப்பினை நிறுவிக்ககொள்ள வேண்டும்.

அதன் பின்னர் Google Drive Settings பகுதிக்கு சென்று Privacy Screen என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

இங்கு லொக் தாமதப்படுத்தப்படவேண்டிய நேரத்தினை தெரிவு செய்யவும் முடியும்.

அதன் பின்னர் உறுதிப்படுத்தி OK பொத்தானை அழுத்துவதன் மூலம் குறித்த வசதி செயற்படுத்தப்படும்.