பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்து மிக பெரிய வெற்றியடைந்த படம் சந்திரமுகி.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ், பி.வாசு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும் வேட்டையான் கதாபாத்திரத்தில் கூட லாரன்ஸ் நடிக்கப்போவதாக தகவல் வெளிவந்திருந்தது.
இந்நிலையில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.
தற்போது இந்த கதாபாத்திரத்தில் மீண்டும் நடிகை ஜோதிகவே நடிக்கப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் நடிகை ஜோதிகாவிற்கு இப்படத்தில் இரண்டு கதாபாத்திரம் என்றும் தெரிவிக்கின்றனர்.