இன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு சனி உச்சத்தில் இருக்கும் அது எந்த ராசி தெரியுமா ? ? இதோ இன்றைய ராசிபலன் (08.05.2020)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மே – 8 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்பு…….

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்
மேஷராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமையுடனும் சிந்தித்தும் செயல்படவேண்டிய நாள். முக்கிய முடிவுகள் எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். விநாயகரை வழிபடுவதன் மூலம் அனுகூலப் பலன்களைப் பெறலாம்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷபராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். செந்திலாண்டவரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்
மிதுனராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சிலருக்கு அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அம்பிகையை தியானித்து இன்றைய நாளைத் தொடங்குவது நன்று.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வ வழிபாடுகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

கடகம்
கடகராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். அதனால் நன்மையே ஏற்படும். எதிர்ப்புகளும் இடையூறுகளும் நீங்கும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வருவார்கள். பிற்பகலுக்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். சிவபெருமானை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்க நன்மைகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில சங்கடங்கள் உண்டாகும்.

சிம்மம்
சிம்மராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கியப் பிரமுகர் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே காணப்படும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உற்சாகம் தரும். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் பல வகைகளிலும் நற்பலன்கள் அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.

கன்னி
கன்னிராசி அன்பர்களே!

தேவையான பணம் இருப்பதால் செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள். உறவினர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக் கசப்புகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் சுபச் செலவு ஏற்படும். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் விற்பனையை அதிகரிப்பதில் பணியாளர்கள் உற்சாகமாக ஈடுபடுவார்கள். மகாலட்சுமி வழிபாடு நல்ல மாற்றங்களைத் தரும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவையைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.

துலாம்
துலாராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாளாக இருக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். வாழ்க்கைத்துணையின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். இன்று நரசிம்ம மூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிகராசி அன்பர்களே!

மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் கிடைக் கும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் நன்மைகள் கூடுதலாக நடைபெறும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு
தனுசுராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணவரவு இருந்தாலும், திடீர் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். பிற்பகலுக்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும். அம்பிகையை தியானித்து நாளைத் தொடங்குவதன் மூலம் சிரமங்கள் நீங்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக இருப்பது அவசியம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

மகரம்
மகரராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாள். குடும்பப் பொறுப்புகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் கேட்பதை வாங்கித் தந்து அவர்களை உற்சாகப்படுத்துவீர்கள். உங்கள் முயற்சிக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். மகாவிஷ்ணுவை வழிபட, அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

கும்பம்
கும்பராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படும் என்பதால் கவனம் தேவை. பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.

மீனம்
மீனராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அனுசர ணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். விநாயகரை வழிபட புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.