கொரோனாவால் உலகம் முழுக்க இன்றைய நாள் வரை 39.16 லட்சம் பேர் பாதிக்கபட்டுள்ளார்கள். இந்த வைரஸ் நோய் தொற்றால் இதுவரை 2.70 லட்சம் பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவிலும் இதுவரை 56 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு இதில் 1889 பேர் இறந்துள்ளனர். கடந்த மார்ச் 24 முதல் தேசியளவில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்னும் நீடிக்கும் நிலை எழுந்துள்ளது.
சினிமாவில் படப்பிடிப்பு நிறுத்தம், தியேட்டர்கள் மூடல் என நிலை இருந்து வருகிறது. சினிமா நடிகர்கள், நடிகைகள் தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து நிலவிவருகிறது.
அண்மையில் நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி தயாரிப்பாளர்களின் நலன் கருதி தன் சம்பளத்தில் 25 சதவீத்தை குறைத்துக்கொண்டார். அதாவது ஒரு கோடி ரூபாய் வரை குறைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான ஹரிஷ் கல்யாண் விஜய் ஆண்டனி சார் செய்திருப்பது மிகப்பெரிய விசயம். நானும் இதை தொடரவுள்ளேன் என கூறியுள்ளார்.
ஹரிஷ் கல்யாணின் இந்த முடிவை ரசிகர்களும், திரைத்துறை வட்டாரத்தினரும் வரவேற்றுள்ளனர்.