நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தும் நோக்கில் எதிர்வரும் திங்கட்கிழமை முழுமையாக நாடு திறக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரச மற்றும் தனியார் துறையினர் பணிகளுக்கு செல்லவுள்ளதால் அடுத்த வாரம் முதல் சுற்றுச்சூழல்களில் வீசப்படும் முகக் கவசம், கையுறைகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமகாலத்தில் நாட்டு மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தற்போது அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்து முகமூடிகளைப் பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எப்படியிருப்பினும், தற்போது பயன்பாட்டில் உள்ள முகக்கவசங்களின் எண்ணிக்கை குறித்த சரியான தரவு மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தில் அல்லது சுகாதார அமைச்சில் இல்லை என கூறப்படுகின்றது.
அத்தகைய கழிவுகளை நிர்வகிக்கவோ அல்லது மறுசுழற்சி செய்யவோ இயலாமை என்பது ஒரு பாரிய பிரச்சினையாகியுள்ளது.
சுற்றுச்சூழல் நீதி மையத்தின் சமீபத்திய ஆய்வில், பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்களில் 56 சதவீதம் எரியக் கூடியவைகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள், பொறியாளர்கள் போன்ற படித்த குழுக்களின் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 9% முகக் கவசங்கள் முறையாக அகற்றப்பட்டதாகவும், மீதமுள்ள 36% சுற்றுச்சூழலுக்கு முறையற்ற விதத்தில் விடுவிக்கப்பட்டதாகவும் சுற்றுச்சூழல் நீதி மையத்தின் நிர்வாக இயக்குனர் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.
இதனால் பாரிய சுகாதார பிரச்சினை ஒன்றுக்கு முகம் கொடுக்க நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.