கோரக்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் பசியால் வாடும் குரங்குகளின் பசியை போக்க வாழைப்பழங்கள் கொண்டு வந்து கொடுக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பாராட்டினை பெற்றுள்ளது.
பல நாடுகளில் மக்களை பாதுகாக்க ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சாலைகளில் நடமாடும் விலங்குகள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றது.
சில தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து விலங்குகளுக்கு உதவி வருகின்றனர். இதனிடையே கோரக்பூரில் இளைஞர் ஒருவர் வாழைப்பழங்களை சேகரித்து குரங்குகளின் பசிபோக்கி வருகின்றார்.
View this post on Instagram