கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட Google Lens அப்பிளிக்கேஷன் ஆனது புகைப்படங்களை அடையாளம் காண்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த அப்பிளிக்கேஷனில் தற்போது மற்றுமொரு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது கையால் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களைக் கொண்ட வன்பிரதிகளை டிஜிட்டல் மாதிரியான மென்பிரதிக்கு மாற்றக்கூடியதாக இருக்கின்றது.
இதன் மூலம் வன்பிரதிகளை மென்பிரதிகளாக கணினியில் பயன்படுத்த முடியும்.
எனவே வன்பிரதிகளை மென்பிரதிகளாக்குவதற்கு தட்டச்சு செய்யவேண்டிய அவசியம் இல்லை.
இவ் வசதியைப் பெற்றுக்கொள்வற்கு Google Lens அப்பிளிக்கேஷனை மொபைல் சாதனத்தில் செயற்படுத்த வேண்டும்.
அதன் பின்னர் டிஜிட்டலாக மாற்றப்பட வேண்டிய கையெழுத்துப் பிரிதியை புகைப்படம் எடுக்க வேண்டும்.
தொடர்ந்து நகல் செய்யப்பட வேண்டிய பகுதியை தெரிவு செய்து Copy to Computer என்பதை தெரிவு செய்யவும்.
இப்போது லேப்டொப் அல்லது டெக்ஸ்டொப் கணியில் குரோம் இணைய உலாவியில் லொக்கின் ஆகவும்.
அங்கு Google Lens மூலம் நகல் செய்யப்பட்டதற்கான Notification பெறப்பட்டிருக்கும்.
அதனைக் கிளிக் செய்து எழுத்துருக்களை நகல் செய்து விரும்பிய இடத்தில் பயன்படுத்த முடியும்.
இங்கு Google Lens மற்றும் இணைய உலாவியில் ஒரே கூகுள் கணக்கினை பயன்படுத்த வேண்டும்.
இவ் வசதியானது தற்போதுள்ள நிலையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடக்குறிப்புக்களை டிஜிட்டல் முறையில் பகிர்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.