இயற்கை தந்த கொடைகளில் ஒன்று தர்பூசணி. இது நம்மை கொளுத்தும் கோடையில் நம்மை குளிர்விக்க வந்த ஒரு அற்புதமான பழம்.
அனைவருக்குமே தர்பூசணியை பிடிக்கும். தர்பூசணி நிறமும், அதன் சுவையும் யாருமே பிடிக்காது என்று சொல்ல முடியாது. தர்பூசணு சுவைக்காகவே கோடையை எதிர்பார்ப்பவர்கள் நிறைய பேர் உண்டு.
உடல் வறட்சி ஏற்படுவதை தடுத்து உடலுக்கு நீர்ச்சத்து கொடுக்கும் பழம் தர்பூசணி. இதில் வைட்டமின்களும், தாது உப்புக்களும், இரும்புச்சத்தும் நிறைந்து காணப்படுகிறது.
தர்பூசணி சாப்பிட்டால் எவ்வளவு பலன்கள் இருக்கு என்பதை பார்ப்போம்
- கோடையில் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
- உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் கண்களில் எரிச்சல், சூடான உணர்வு, சருமம் வறண்டு போகும். மயக்கமும் ஏற்படும்.
- அதிலும் கோடை வெப்பத்தில் நீர்ச்சத்து வியர்வை வழியாகவும் வெளியேறக்கூடும் என்பதால், போதுமான அளவு தண்ணீர் குடித்தாலும் கூட உடலில் அதிக வறட்சி ஏற்படும்.
- தர்பூசணியில் 95% நீர்ச்சத்து உள்ளது. அதோடு அல்லாமல் எலக்ட்ரோலைட், பொட்டாசியம் போன்றவற்றை கொண்டிருப்பதால் கோடையில் உடலில் நீர் வறட்சியை கட்டுப்படுத்த தர்பூசணி நிச்சயம் உதவி செய்கிறது.
- உடலில் நீர்ச்சத்து குறைவதால் ரத்தத்திலும் நீர்ச்சத்து குறைந்து ரத்த ஓட்டம் மெதுவாக பாதிப்படையும். தர்பூசணி சாறு குடித்துவந்தால் ரத்த அழுத்தம் குறையும்.
- தர்பூசணி தினமும் குடித்தால் உடலில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகளான தமனிகளின் பணிகள் சிறப்பாக செய்யு.
- தர்பூசணியில் இருக்கும் லைகோபீன் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
- உடலில் உயர் அடர்த்தியுடன் கொண்டிருக்கும் நல்ல கொழுப்பை அதிகரிக்கும். குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பையும் குறைக்கம்.
- பைட்டோஸ்டிரோல்ஸ் தர்பூசணியில் அதிகமாக உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தர்பூசணி இதயம் காக்கும் தோழனாக பணியாற்றுகிறது.
- தர்பூசணி வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.
- பீட்டா கரோட்டின், லூடீன் சியாக்ஸந்தின் போன்ற ஆன்டி ஆக்சிடண்ட்கள், லைக்கோபீன் மிகுந்திருக்கும் தர்பூசணி புராஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்.
- தர்பூசணி புற்றுநோய்கள் வருவதை தடுக்கும்.
- புற்று நோயை உண்டாக்கும் செல்கள் டிஎன்ஏ வை சேதப்படுத்தகூடும். இந்த செல்களை எதிர்த்து போராடும் அளவுக்கு எதிர்ப்புசக்தியை தரக்கூடிய குணம் தர்பூசணியில் உள்ளது.
- உடலுக்கு தேவையான எதிர்ப்புசக்தி அதிகமாக தர்பூசணி கொடுக்கிறது.
- தர்பூசணி தினமும் குடித்து வந்தால் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும்.
- கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு தசைகளில் உண்டாகு வலியை நீக்க தர்பூசணி சாறு பருகலாம். இதனால் உடல் சோர்வு தீரும்.
- உடல் எடை குறைய விரும்புபவர்கள் கோடைக்காலத்தில் சத்தை இழக்காமல் எடை குறைய விரும்பினால் தர்பூசணியை தேர்வு செய்து குடிக்கலாம்.
- நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டிருக்கும் தர்பூசணியில் கலோரியின் அளவு மிக குறைவாக இருப்பதால் இதை தினமும் இரண்டு கப் அளவு தர்பூசணி துண்டங்களை எடுத்துவந்தால் 4 வாரங்களில் உடல் எடை குறையும்.