விந்தணு வழியாகவும் இந்த கொடிய நோய் பரவுமாம்! வெளியான முக்கிய செய்தி!

விஞ்ஞானம் பெருக பெருக உலகில் புதுவிதமான நோய்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவ்வகையில் தற்போது உலகம் முழுக்க கொரோனா வைரஸ் நோய் பரவி உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியள்ளது. இறந்தவர்கள் 2.70 லட்சம் பேர்.

சீனாவில் தொடங்கி இந்த வைரஸ் உலக நாடுகள் முழுக்க பல லட்சம் மரணங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்நோய் குறித்து சீன விஞ்ஞானிகள் தொடர் ஆராய்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் தற்போது வெளியிட்டுள்ள செய்தி ஆண்கள் பலரையும் அதிரவைத்துள்ளது.

இதில் சீன ஆய்வாளர் ஒருவர் சீனாவின் ஷன்குவி முனிசிப்பல் மருத்துவமனையில் கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சில ஆண்களின் விந்தணுவை பரிசோதன செய்ததில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

38 நோயாளிகளுக்கு சோதனை செய்ததில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் விந்தணுவிலும் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் மருத்துவர் டயாங்கெங் லி கூறியதாவது கொரோனா பாதிப்பு உள்ளவரோடு உடலுறவு கொள்வதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

இதில் விசயம் என்னவெனில் ஆண்களின் விந்தணுவால் கொரோனா வைரஸால் இனப்பெருக்கம் செய்ய முடியாது, ஆனால் விந்தணு கருமுட்டையில் செலுத்தப்படும் போது உடலின் நோய் சக்தி பயன்படாது, கொரோனா பாலியல் ரீதியாக பரவும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் பல விவரங்கள் மா நெட்வொர்க் ஓபனில் வெளியிடப்பட்ட ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.