கரோனா வைரஸின் காரணமாக உலகமே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இந்த நோயின் தாக்கம் கர்ப்பிணி பெண்களுக்கும் அதிகளவு பரவும் என்பது ஆய்வில் தெரியவந்தது. மேலும், முன்னதாக துவக்கத்தில் இருந்தே 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள், 55 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள், சர்க்கரை நோய் உள்ள நபர்கள், கர்ப்பிணி பெண்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.
கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தொடர்ந்து வரும் நிலையில், இது குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிர்யாராஜ் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசிய சமயத்தில்,
கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இவர்களின் பிரசவ தேதிக்கு சுமார் ஒரு வாரத்திற்கு முன்னதாக கரோனா பாதிப்பு சோதனை செய்யப்படுகிறது. இவர்களுக்கு பாதிப்பு இருந்தால், உடனடியாக மேல் சிகிச்சைக்கு தகுந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்களுக்கு எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் கொரோனா சோதனையும் செய்யப்பட்டு வருகிறது.
கர்ப்பிணிகள் வெளியே செல்லும் சமயத்தில் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இதனைப்போன்று, கர்ப்பிணி பெண்கள் வீட்டில் இருக்கும் நபர்கள், வெளியே சென்று வரும் சமயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி என்பது குறைவாக இருக்கும், இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு கரோனா நோய்த்தொற்று தாக்கும் வாய்ப்பு அதிகளவு இருக்கிறியாது.
கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்லாது அனைவரும் சுகாதாரத்துறையின் நடவடிக்கையை கடைபிடிக்கும் பட்சத்திலேயே கொரோனாவை கட்டுக்குள் வைக்க இயலும். கர்ப்பிணி பெண்கள் வீட்டில் இருக்கும் பிற நபர்கள் தேவையில்லாமல் வெளியே செல்லும் செயலை தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும் பட்சத்தில், அடிக்கடி கை மற்றும் கால்களை கழுவுதல், வீட்டில் உள்ள குழந்தைகளை கவனித்துக்கொள்ளுதல் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.
குழந்தைகள் எதிர்பாராத விதமாக வெளியே சென்று விளையாடும் பட்சத்தில், இதன்மூலமாக நோய்த்தொற்று பரவும் வாய்ப்பு இருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில், தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது மிகவும் நல்லது. நல்ல ஆரோக்கியமான உணவுகள் மற்றும் சத்துள்ள பழங்களை சாப்பிடுவதன் மூலமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என்றும் கூறினார்.