3 வயது சிறுவனை கொடூரமாக சாப்பிட்ட சிறுத்தை..!!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்நகர் மாவட்டம் மாகடி பகுதியை சார்ந்தவர் சந்திரசேகர். இவரது மகனின் பெயர் ஹேமந்த் (வயது 3). சந்திரசேகரின் வீடானது வனப்பகுதியை ஒட்டி இருக்கும் நிலையில், நேற்று முன்தினத்தின் போது சந்திரசேகர் மற்றும் அவரின் மனைவி, குழந்தைகள் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்த நிலையில், சந்திரசேகரின் தாய் மற்றும் தந்தை வராண்டாவில் படுத்து உறங்கியுள்ளனர்.

இரவு நேரத்தில் வீட்டின் கதவுகள் அடைக்கப்படாமல் இருந்த நிலையில், அதிகாலை நேரத்தில் வீட்டிற்கு வந்த சிறுத்தை, சந்திரசேகரின் வீட்டிற்குள் புகுந்து, தூங்கிக்கொண்டு இருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. மேலும், கண்விழித்து பார்க்கையில் தனது குழந்தை காணாமல் போனதை அடுத்து, அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடி அலைந்துள்ளனர்.

இந்த நிலையில், குழந்தையின் உடல் இரத்த வெள்ளத்தில் ஹேமந்த்தின் உடல் இருக்கவே, சிறுவனின் உடலில் சிறுத்தையின் கால் தடம் இருந்துள்ளது. குழந்தையின் உடலை கண்ட சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழவே, பெரும் சோகம் ஏற்பட்டது.

இதனையடுத்து இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், குழந்தையை சிறுத்தை கொலை செய்ததை உறுதி செய்துள்ளனர். சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துளள்னர். மேலும், வனத்துறை மந்திரி எம்.பி ஆனந்த் சிங் ரூ.7 இலட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.