தமிழ் திரையுலகில் “மேயாத மான்” திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இந்த படத்திற்கு பின்னர், நடிகர் எஸ்.ஜே சூர்யாவுடன் “மான்ஸ்டர்” திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், நடிகர் அருண் விஜய்யுடன் “மாபியா” திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர் தற்போது “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், இப்படத்தில் கமல் ஹாசனின் தோழியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அடுத்தபடியாக விஷாலுடன் ஒரு படமும், ராகவா லாரன்சுடன் மற்றொரு படத்திலும் நடிக்கவுள்ள நிலையில், ஹரிஷ் கல்யாணுடன் மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு பின்னர், மீண்டும் எஸ்.ஜே சூர்யாவுடன் “பொம்மை” என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த நிலையில், கவர்ச்சியாக நடிப்பது குறித்து இவரிடம் கேட்ட சமயத்தில், எனது உடலுக்கும், முகத்திற்கும் கவர்த்தி என்பது சரியாக இருக்காது. இதனால் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன். கவர்ச்சியை கொண்ட சில படங்களும் வந்தது. அதனை வேண்டாம் என்று கூறிவிட்டேன் என்று கூறினார்.