மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், மதுபான கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மதுபான கடைகள் மூட சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சென்னை நீங்கலாக தமிழகத்தில் திறக்கப்பட்ட மதுபான கடைகள், 43 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ள மதுபான கடைகளில், குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு கடைகள் திறக்கப்பட்டாலும், கடை திறந்த ஒரு நாட்களிலேயே பல குற்ற சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியது.
மொத்தமாக ரூ.294 கோடிக்கு மதுபானம் விற்பனை ஆகிய நிலையில், பல எதிர்ப்புகளை மீறி தமிழக அரசு மதுபான கடைகளை திறந்தது. மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடும் செய்துள்ளது. இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கானாஜாவை நிரப்பும் வேறு வழியை பாருங்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
— Rajinikanth (@rajinikanth) May 10, 2020