எங்க போனாலும் விடமாட்டோம்.. அதிரடி காட்டிய கமல் ஹாசன்.!!

மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், மதுபான கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மதுபான கடைகள் மூட நேற்றிரவு சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சென்னை நீங்கலாக தமிழகத்தில் திறக்கப்பட்ட மதுபான கடைகள், 43 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ள மதுபான கடைகளில், குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு கடைகள் திறக்கப்பட்டாலும், கடை திறந்த ஒரு நாட்களிலேயே பல குற்ற சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியது.

இந்த நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மதுபான கடைகளை திறக்க மேல்முறையீடு செய்திருந்தது. இதனை எதிர்த்து பாமக வழக்கறிஞர் பாலு கேவியட் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், மக்கள் நீதி மையம் சார்பாகவும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நடிகர் கமல் ஹாசன் ட்விட்டர் பதிவில், ” குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின்  தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும் ”  என்று கூறியுள்ளார்…