பெண்ணின் உடல் உறுப்பை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய பிரபல இயக்குனர்!

சினிமா வட்டாரத்தை சுற்றி எப்போதும் ஏதாவது சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருப்பதுண்டு. இதில் தெலுங்கு சினிமாவை சேர்ந்த இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் பெயர் அடிக்கடி சிக்குவதுண்டு.

அவரும் எதையாவது சொல்லி மற்ற நடிகர்கள், நடிகைகளின் ரசிகர்களிடத்தில் எதிர்ப்பை சந்தித்து வருகிறார். அண்மையில் ஒயின் ஷாப் வாசலில் பெண்கள் வரிசையில் நின்று கொண்டிருந்ததை கொச்சையாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் தற்போது டிவிட்டரில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதில் இரண்டு பெண்கள் காரில் இருக்கிறார்கள். முன் இருக்கையில் இருக்கும் பெண் நிறைய நகைகள் அணிந்துள்ளார். பின் இருக்கையில் இருக்கையில் உள்ள பெண் இயற்கையான அழகில் கவர்ச்சி உடையில் இருக்கிறார்.

இதை ராம் கோபால் வர்மா மனிதன் உருவாக்கிய நகை முன்னால் உள்ளது, கடவுள் உருவாக்கிய நகை பின்னால் உள்ளது என பெண்ணின் முன்னழகை விமர்சனம் செய்ய சர்ச்சையாகியுள்ளது.

பின்னால் இருப்பவர் உங்கள் மகளாக இருந்தால் இப்படி விமர்சனம் செய்வீர்களா என பதிலடி கொடுத்துள்ளனர்.