திருட்டுத்தனமாக டிவியில் ஒளிபரப்பான கேஜிஎஃப் படம்!

கன்னட மொழியில் எடுக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்த படம் கேஜிஎஃப்.

கன்னட நடிகர் யஷ் ஹீரோவாக நடிக்க கோலார் தங்க சுரங்கத்தில் நீண்ட நாட்களாக இருந்து வரும் அடிமை முறையை இப்படம் வெளிச்சம் போட்டு காட்டியது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள இதன் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேஜிஎஃப் சாப்டர் 1 படத்தின் டிவி உரிமை தெலுங்கில் இன்னும் யாருக்கும் விற்கப்படவில்லை. இந்நிலையில் அனுமதி எதுவும் பெறாமல் தெலுங்கு டிவிசானல் ஒன்று திருட்டுத்தனமாக கேபிள் மூலம் இப்படத்தை ஒளிபரப்பியுள்ளது. இதனால் அதிர்ந்து போன இப்படத்தின் தயாரிப்பாளர் அந்த டிவி சானல் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளாராம்.