தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 669 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,204 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 135 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,959 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 3 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் ஏற்கனவே 3,330 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 509 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. செங்கல்பட்டில் 43 பேருக்கும், திருவள்ளூரில் 47 பேருக்கும், திருநெல்வேலியில் 10 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 8 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 10 பேருக்கும், பெரம்பலூரில் 9 பேருக்கும், ராணிப்பேட்டை, விழுப்புரத்தில் 6 பேருக்கும், மதுரை, அரியலூரில் 4 பேருக்கும், தேனி, வேலூரில் தலா 3 பேருக்கும், விருதுநகரில் 2 பேருக்கும், திருப்பத்தூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், கரூரில் தலா 1 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
சென்னையில் 1 வயது பெண் குழந்தையும் சேர்த்து 26 குழந்தைகள் உள்பட 509 பேரும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது. செங்கல்பட்டில் 4 வயது ஆண் குழந்தையையும் சேர்த்து 6 குழந்தைகள் உள்பட 43 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.