தித்திக்குதே ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு இவ்வளவு பெரிய பெண் குழந்தையா..

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக திகழ்ந்து தற்போது குணச்சித்திர நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜயகுமார். பெரிய குடும்பத்தோடு சினிமாத்துறையில் அணிவகுத்தவர்கள் இவர் குழந்தைகள். வனிதா, அருண் விஜய் வரிசையில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமனவர் ஸ்ரீதேவி விஜயகுமார்.

ரிக்‌ஷா மாமா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் அம்மா வந்தாச்சு, தெய்வக்குழந்தை, சுகமான சுமைகள் போன்ற படத்திலும் நடித்து வந்தார்.

இதையடுத்து காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் நடிகையாக கதாநாயகியாக அறிமுகமானார். பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் தவித்து தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து புகழ் பெற்றார்.

2009ல் ராகுல் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையை பார்த்து வருகிறார். கடந்த 2016ல் ரூபிகா என்ற மகளை பெற்றுள்ளார் ஸ்ரீதேவி.

குழந்தையாக இருந்த ரூபிகாவினை யாருக்கும் காட்டி வராத ஸ்ரீதேவி லாக்டவுனில் மகளுடன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். தற்போது குழந்தையின் அழகிய புகைப்படத்தோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.