பலபேர் என்னை 11 மணிக்கு படுக்கைக்கு அழைத்தனர்.. கோட் வேர்ட் இதுதானா? நடிகை ஷெர்லின் சோப்ரா…

கொரானா வைரஸால் உலகத்தில் பல நாடுகள் அதிகளவில் பாதித்து வருகிறது. அதில் மிகப்பெரிய ஆபத்தில் இருப்பதாக இந்தியா திகழ்கிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதற்காக நாடுமுழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது லாக்டவுனால் சினிமா பிரபலங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். நேரத்தினை போக்க சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்தும் ரசிகர்களுடன் பேசியும் வருகிறார்கள்.

ஹாலிவுட், பாலிவுட் என்று சில படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷெர்லின் சோப்ரா. இந்நிலையில் தனது திரைப்பட வாழ்க்கை பற்றியும் அதில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பற்றியும் பகிர்ந்துள்ளார் கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா.

இந்தி பட வாய்ப்பிற்காக என் போட்டோஹுட் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு தயாரிப்பு நிறுவனத்தினருடன் நேர்காணலுக்கு சென்றேன். நான் சந்தித்த பலர் என்னை இரவு 11 அல்லது 12 மணிக்கு டின்னருக்கு அழைத்தனர். என்னால் அந்த நேரத்தில் வரமுடியாது என்று கூறி வந்துவிடுவேன். அப்போது எனக்கு அவர்கள் என்னிடம் ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.

இதையடுத்து படவாய்ப்பிற்காக பார்க்கும் அனைவரும் இதேபோல் அழைத்தனர். அப்போதுதான் புரிந்தது என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்றும் இதுதான் அதற்கான கோட் வேர்ட்டாக இருக்கிறது என்றும் புரிந்து கொண்டேன். இதற்கு பின் கேட்ட ஒருவரிடன் நான் டயட்டில் இருக்கிறேன் டின்னர் சாப்பிடுவதில்லை காலை அல்லது மதியம் பார்க்கலாம் என்று கூறிவிட்டு வருவேன்.

இதற்குபிறகு யாரும் இதுபோல் என்னிடம் கேட்டது கிடையாது.