பெரும்பாலான நடிகைகள் திருமணம் செய்யாமல் வயது பற்றி எந்த கவலையும் இல்லாமல் நடிப்பு, அழகு, உடல் எடை போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வருவார்கள். திருமணம் பற்றிய எண்ணம் அவர்களின் பெற்றோர்கள் கூறியும் வேண்டாம் என்று தள்ளிப்போடுவார்கள்.
அந்தவகையில் தென்னிந்திய சினிமா நடிகைகள் படங்களில் நடிப்பதே முக்கியம் என்றும் திருமணம் நடந்தால் பிறகு நடிக்க முடியாது என்ற காரணத்தாலும் தான் அப்படி முடிவெடுக்கிறார்கள். அப்படி இருப்பவர் தான் நடிகை ராகுல் ப்ரீத் சிங். தென்னிந்திய சினிமாவில் தற்போது பிஸி நடிகை பட்டியலில் இருந்து வருகிறார்.
தற்போது அவரது தாயார் சமீபத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் ராகுல் ப்ரீத் சிங்கின் திருமணம் குறித்து கூறியுள்ளார். நான் என் மகளிடம் பல முறை அதை பற்றி கூறியும் கேட்கவில்லை. நல்ல பையன் என்று நீயே கூறினாலும் ஓகே தான் என்றும் கூறிவிட்டேன்.
இனிமேல் நாங்கள் தான் மாப்பிள்ளை பார்க்க வேண்டும். குறைந்த வயதுடைய சிறந்த நபரான மாப்பிள்ளையாக கிடைத்தாலும் எங்களுக்கு ஓகே தான் என்று கூறினார். அதற்கும் அதெல்லாம் வேண்டாம் ஒருவயது மூத்தவராக இருக்க வேண்டும் என்று கூறிகிறாள் என் மகள் என்று கூறி மூச்சுவிட்டுள்ளார் தாயார் ரினி சிங்.