மடிக்கக்கூடிய கைப்பேசி தொடர்பில் சாம்சுங் வெளியிட்ட தகவல்..!!!

சாம்சுங் நிறுவனம் கடந்த வருடம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இதன் விலை அதிகமாகக் காணப்பட்ட போதிலும் கைப்பேசி பிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து சற்று குறைந்த விலையில் Galaxy Fold 2 மற்றுமொரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை இவ்வருடம் அறிமுகம் செய்யவுள்ளது.

இதனைத் தொடர்ந்து மேலும் குறைந்தவிலையில் விற்பனை செய்யக்கூடிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்து வருவதாக சாம்சுங் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.

இவற்றின் விலையானது 1,100 டொலர்களை விடவும் குறைாவக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை தற்போது அறிமுகமாகவுள்ள Galaxy Fold 2 கைப்பேசியானது 64 மெகாபிக்சல்களை கொண்ட கமெரா சென்சார், Qualcomm Snapdragon 865 processor மற்றும் 256GB, 512GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.