ஆப்பிள் நிறுவனமானது உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள ஸ்டோர்களை கொரோனா வைரஸ் தாக்கத்தினை அடுத்து மூடியிருந்தது.
இதனால் ஏறத்தாழ இரண்டு மாத காலமாக ஆப்பிள் சாதனங்களின் விற்பனையிலும் வீழ்ச்சி காணப்பட்டது.
இப்படியான நிலையில் தற்போது மீண்டும் குறித்த ஸ்டோர்களை திறக்கும் முயற்சியில் ஆப்பிள் இறங்கியுள்ளது.
இதன்படி அமெரிக்காவில் உள்ள சில ஸ்டோர்களை அடுத்த வாரம் அளவில் திறக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கு முன்னர் குறித்த ஸ்டோர்களை சுகாதாரப் பரிசோதனைக்கு உட்பத்தவும் தீர்மானித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் மாத்திரம் 271 ஸ்டோர்களை கொண்டிருப்பதுடன் உலகளவில் 500 இற்கும் அதிகமான ஸ்டோர்களை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.