Google Duo தரும் புத்தம் புதிய அதிரடி வசதி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக அளவில் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர்.

இந்நிலையில் உறவினர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்வதற்கு வீடியோ தொடர்பாடல் அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனைக் கருத்திற்கொண்டு Google Duo ஆனது புதிய வசதி ஒன்றினை பயனருக்கு வழங்க முன்வந்துள்ளது.

அதாவது இதுவரை காலமும் அப்பிளிக்கேஷன் மூலமாகவே குழுக்களுக்கிடையிலான தொடர்பாடல் மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது.

ஆனால் தற்போது இணையப் பக்கத்திலும் இவ் வசதி வழங்கப்படவுள்ளது.

எனவே இணைய உலாவியிலேயே Google Duo மூலம் குழுக்களுக்கு இடையே வீடியோ அழைப்பினை ஏற்படுத்தி மகிழ முடியும்.

இதேவேளை மைக்ரோசொப்ட், பேஸ்புக் நிறுவனங்களும் மேம்படுத்தப்பட்ட வீடியோ சேவையை பயனர்களுக்கு வழங்க தயாராகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.