புத்தம் புதிய வடிவமைப்பில் பேஸ்புக்

முன்னணி சமூகவலைத்தளமாக பேஸ்புக் ஆனது பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது பல மாற்றங்களை செய்துவருகின்றது.

இந்த வரிசையில் தற்போது இணைய உலாவியில் பயன்படுத்தப்படும் பேஸ்புக் வலைத்தளத்தின் வடிவமைப்பில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

இது தொடர்பான தகவல் கடந்த F8 மாநாட்டில் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது நடைமுறைக்கு வருகின்றது.

இதன்படி அனைத்து வகையான வடிவமைப்புக்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், சில வசதிகளும் இடம் மாற்றப்பட்டுள்ளன.

மேலும் இம் மாற்றமானது உலகிலுள்ள அனைத்து பேஸ்புக் பயனர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.