கொரோனா குறித்து, தவறான கருத்துகள் குறிப்பிடும் டிவீட்டுகள் நீக்கப்படும் என்று டிவிட்டர் அறிவித்துள்ளது. அதில், அதிபர் டொனால்ட் டிரம்பின் தகவல்களும் அடங்கும்.
திங்களன்று இதற்கான பணிகள் துவங்கப்பட்டுவிட்டதாக டிவிட்டர் தெரிவித்துள்ளது. இதன் மூலம் முதலில் எச்சரிக்கை செய்திகள் அந்த தகவல் பதிவிட்டவருக்கு அனுப்பப்படும் பின் அது நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க, அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அனைத்து உலக தலைவர்கள் யாரானாலும், தவறான தகவல் பரப்புவோருக்கு ஒரு லேபல் வழங்கப்படும் என்று டிவிட்டர் தலைவர் Yoel Roth தெரிவித்துள்ளார்.
முன்னதாக அதிபர் டொனால்ட் டிரம்ப், கொரோனா மருந்து குறித்து பல தவறான தகவல்களை வெளியிட்டிருந்தார். அதன்பின்னரே இதற்கான அறிவிப்பு வெளியானது.