கட்டுப்பாடு இழக்கப்பட்டதன் காரணமாக ரொக்கெட் ஒன்றின் இராட்சத பாகம் பூமியில் வீழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பாகத்தின் நீளமானது 30 மீற்றர்கள் ஆகும். அட்லான்டிக் சமுத்திரத்திப் பகுதியில் நேற்றைய தினம் வீழ்ந்துள்ளது.
சீனாவினால் கடந்த 5 ஆம் திகதி விண்ணை நோக்கி அனுப்பப்பட்ட Chinese Long March 5B (CZ–5B) எனும் ரொக்கெட்டின் பகுதியே இவ்வாறு வீழ்ந்துள்ளது.
சில நாட்கள் பூமியின் ஒழுக்கில் காணப்பட்ட குறித்த ரொக்கெட் ஆனது பூமியை நோக்கிய திரும்பியவேளை பூமியின் வளிக்கோளத்தினுள் நுழைய முன்னரே கட்டுப்பாட்டினை இழந்துள்ளது.
இதன் காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், சமுத்திரத்தின் நீர்ப்பரப்பில் விழுந்தமையினால் பாரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை வளிமண்டலத்தினுள் நுழையும்போது குறித்த பாகமானது தீப்பற்றியிருக்கவில்லை என்பதும் சற்று ஆறுதலான விடயம் ஆகும்.