தற்போது உலகை ஆட்டிப்படைக்கும் COVID-19 வைரஸ் தொடர்பாக பல ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்தினை உருவாக்கும் முயற்சியே இதற்கு காரணமாகும்.
இவ் ஆராய்ச்சியில் தற்போது SARS-CoV-2 எனும் வைரசை ஒத்த வைரஸ் வௌவால்களில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது SARS-CoV-2 வைரஸில் ஏற்பட்ட பிறழ்வினால் உருவானதாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை COVID-19 வைரஸ் ஆனது வௌவால்கள் அல்லது நாய்கள் என்பவற்றிலிருந்து மனிதர்களுக்கு தொற்றியிருக்கலாம் என்ற கோணத்தில் சந்தேகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையிலேயே வௌவால்களை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சிகளும் இடம்பெற்று வருகின்றன.
எனினும் கடந்த 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் RmYN02 எனும் குழு ஒன்று 227 வௌவால்களின் 302 மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட ஆய்வில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.