தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வருவபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.
இவர்களை செய்த பல நல்ல விஷயங்களை, நாம் இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்ளகிறோம். ஆனால், இவர்கள் செய்து சில தவறான விஷயத்தை தான் இங்கு நாம் பார்த்து தெரிந்து கொள்ள போகிறோம்.
1. அஜித்
தல அஜித் தன்னை வைத்து படம் எடுத்து நஷ்டமடைந்த ஏ.எம். ரத்தினம் என்பவருக்கு மற்றொரு வெற்றி படத்தை நடித்து கொடுத்தார்.
ஆனால் நடிகர் அஜித்தை வைத்து ஆரம்பகால கட்டத்தில் வாலி, ரெட், வில்லன் போன்ற வெற்றி படங்களையும் மற்றும் ஆஞ்சநேய, ஜி, வரலாறு, போன்ற தோல்வி படங்களையும் தயாரித்த Nic atrs தயாரிப்பு நிறுவனம் தற்போது மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
ஆம் வாலு, காளை, 18 வயசு போன்ற படங்களை தயாரித்ததன் மூலம் Nic atrs தயாரிப்பு நிறுவனத்தின் நிலைமை கீழே சரிந்துள்ளது. தன்னை உயர்த்திவிட்டு Nic atrs தயாரிப்பு நிறுவனம் நிலைமை இப்படி இருக்கும் நேரத்தில், தற்போது தல அஜித் ஒரு படத்தை Nic atrs-க்கு நடித்து கொடுத்தால் நன்றாக இருக்குமே.
2. விஜய்
விஜய் தனது ஆரம்பகால கட்டத்தில் திரையுலக ரசிகர்கள் தன்னை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள பல விஷயங்களை செய்தார். அதில் ஒன்றாக தான், அப்போது மிக பெரிய நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் விஜயகாந்துடன் இணைந்து தனது 2 படத்தை தன் தந்தையின் இயக்கத்தில் நடித்தார்.
அதனால் அவருக்கு ஒரு நல்ல தொடக்கம் தமிழ் திரையுலகில் கிடைத்தது. அப்படி விஜய் திரையுலகில் வர தவித்ததை போல் தற்போது நடிகர் விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் திரையுலகில் தன்னை பிரபல படுத்திக்கொள்ள தவித்து கொண்டு இருக்கிறார்.
அப்போது விஜய்க்கு ஒரு நல்ல தொடக்கத்தை விஜயகாந்த் செய்து கொடுத்தது போல், தற்போது தளபதி விஜய், ஷண்முக பாண்டியனுக்கு தனது படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்குமே.