சென்னையை சேர்ந்த தேவிகா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 11 பெண்களும் ஒரு திருமணத்திற்காக தூத்துக்குடிக்கு சென்றுள்ளனர், தீடீரென்று ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் அனைவரும் அங்கேயே மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தேவிகா தவிர மற்ற பெண்கள் அனைவரும் 20 வயது குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்த பேருந்து நிலையங்கள் மற்றும் கோவில்களில் தங்கியுள்ளனர் கையில் இருந்த பணமெல்லாம் செல்லவனாதல் சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் திண்டாடியுள்ளனர்.
அதன்பின் தூத்துகுடி விஜய் ரசிகர் மன்றம் நிர்வாகியிடம் தங்கள் நிலையை கூறியுள்ளனர், உடனடியாக அவர் அகில இந்தியா விஜய் ரசிகர் மன்ற தலைவர் புஸி ஆனந்த்யிடம் இந்த தகவலை கூறியுள்ளார்.
மேலும் இந்த தகவல் நடிகர் விஜய்யிடம் கொண்டு செல்லப்பட்டு, அவர் தூத்துகுடி மற்றும் திருநெல்வேலி மன்ற ரசிகர்களிடம் அந்த 11 பெண்களையும் சென்னைக்கு கொண்டுவர கோரிக்கை விடுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து அரசிடம் முறையான அனுமதி பெற்ற பின் அந்த 11 பெண்களையும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, பத்திரமாக அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்.