கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கொரியாவுக்கான வேலைவாய்ப்பு திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.
கொரியாவுக்கு தொழில் வாய்ப்புக்காக செல்லும் போது 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அவர்களை உட்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.