எலும்பு முறிவுக்கு பிறகு எலும்பு வலிமையடைய பிரண்டயைத்தான் முன்னோர்கள் அதிகம் பயன்படுத்தினார்கள்.
நினைவுத்திறன், மூளை நரம்பு பலப்படுத்தல், ஈறுகளில் ஏற்படும் கசிவு, வாய்வு கோளாறு இப்படி பலவிதமான நன்மைகளை பிரண்டை கொண்டுள்ளது.
குடல் சார்ந்த நோய்களுக்கு பிரண்டை உப்பு சிறந்த மருந்தாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வீட்டில் பிரண்டை உப்பு எப்படி தயார் செய்யலாம் என்று பார்ப்போம்
பிரண்டையை இளசாக இருக்க கூடாது. நன்றாக முற்றின பிரண்டையை எடுத்து கொண்டு, அதன் கணுக்களை நீக்கி விடவேண்டும்.
பின்னர் கல் உப்பு மூன்றில் ஒரு பங்கு அளவு சேர்த்து நன்றாக கலக்கி ஓடும் நீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
நன்றாக சுத்தம் செய்ததும் அதை வெயிலில் உலர வைக்க வேண்டும்.
பிரண்டை உலர்ந்ததும் அதை சுத்தமான இடத்தில் வைத்து எரித்து சாம்பலாக்க வேண்டும்.
முற்றிலும் எரிந்து சாம்பலாக மாறும் வரை எரிக்க வேண்டும், சாம்பல் பிரண்டை துண்டுகள் இல்லாமல் இருத்தல் நல்லது.
இதை சுத்தமான நீரில் கலந்து கரைக்க வேண்டும், சாம்பலின் அளவுக்கேற்ப நீரின் அளவை விட்டு கரைக்க வேண்டும்.
நன்றாக கரைந்ததும் சுத்தமான வெள்ளை துணியில் இந்த நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும், இதில் சாம்பலில் இருக்கும் கசடுகள் மட்டும் தேங்கிவிடும்.
இந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும், நல்ல வெயிலில் காய்ந்த காய அதிலிருக்கும் நீர் வடிய கூடும்.
குறைந்தது 20 முதல் 25 நாட்கள் வரையிலும் கூட ஆகலாம். நீர் சுத்தமாக வடிந்ததும் அந்த ஜாடியில் உப்பு படிந்திருக்கும், இந்த உப்பு வீரியமிக்கது. இதை குறைந்த அளவு பயன்படுத்தினாலே போதும்.
இரும்பு மற்றும் ஈயம் கலந்த பாத்திரங்களை தவிர்த்துவிடுங்கள்.
பயன்கள்
- தினமும் காலையில் கால் டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் பிரண்டை உப்பு கலந்து குடித்து வந்தால் இரண்டு மாதங்களில் உடல் எடை கணிசமாக குறையும்.
- குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆண்மை கோளாறும் ஒரு வகை காரணம். ஆண் மலட்டுத்தன்மை உடல் பலமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு இந்த பிரண்டை உப்பு குணப்படுத்தும்.
- நாட்டு மருந்து கடைகளில் ஜாதிக்காய்த்தூள் கிடைக்கும். தினமும் இரவு பாலில் கால் டீஸ்பூன் பிரண்டை உப்பும், ஒரு டீஸ்பூன் ஜாதிக்காய்த்தூளும் கலந்து குடித்து வந்தால் ஆண்மை கோளாறு நீங்கும்.
- தீராத வயிற்று வலி வாய்ப்புண் இருப்பவர்கள் உணவுக்கு அரைமணி நேரம் முன்பு அரை டீஸ்பூன் அளவு தேனில் பிரண்டை உப்பை குழைத்து சாப்பிட்டால் சரியாகும்.
- குடல் சார்ந்த நோய்களை பிரண்டை உப்பு குணப்படுத்தும். குடலை சுத்தம் செய்யும் பணியையும் கூடுதலாக செய்யும்.
- அதிகப்படியான சோர்வு, குமட்டல், வாந்தி, தலை சுற்றல், பசியின்மை போன்ற சூதகவலியை கொண்டிருப்பவர்கள் மாதவிடாய் வருவதற்கு முந்தைய 15 நாட்களிலிருந்து தினமும் மூன்று வேளையும் பிரண்டை உப்பை நெய்யில் கலந்து சாப்பிட்டால் குணமடையும்.