இந்த பழத்திற்குள் பல அற்புத மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளதாம்!

பழங்கள் ஒவ்வொன்றுக்கும் பற்பல சிறப்பியல்புகள் இருக்கின்றன. ஆனால் மருத்துவச் சிறப்பியல்புகள் அனைத்தையும் ஒருங்கே தன்னகத்தே கொண்ட ஒரு மருத்துவப் பழமாக “ஆப்பிள் ரோஜா” விளங்குகின்றது.

அதனை ஜம்புபழம் என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்றது. இதற்கு தண்ணீர் ஆப்பிள் என்ற பெயரும் உண்டு.

சிறுவர்களும் சுகதேகிகளும், சகலவிதமான நோயாளா்களும் உண்பதற்கு ஏற்ற ஒரு கனியாக இது விளங்குகிறது.

இந்த பழம் சுவையில் மட்டும் சிறந்ததல்ல, மருத்துவ பலன்களிலும் பெரும் இடத்தை வகிக்கிறது.

பாரம்பரிய மருந்துகளில் இந்த பழம் நீரிழிவு நோய், புற்றுநோய் தடுப்பு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான பிரச்சனைகள், வலிப்புத்தாக்கங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவி புரிகின்றது.

அந்தவகையில் தற்போது இதன்மருத்துவ பயன்கள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

  • ரோஜா ஆப்பிள்களில் ஒரு ஆல்கலாய்டு ‘ஜம்போசின்’உள்ளது. இது ஸ்டார்ச் வழிமுறையை சர்க்கரையாக மாற்றிடும். நீரிழிவு நோயாளிகளும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இந்த பழத்தை சாப்பிடலாம்.
  • ரோஜா ஆப்பிளில் இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படும், அதாவது, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாது.
  • ரோஜா ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ பிற சேர்மங்களுடன் இணைந்து புற்றுநோயில் இருந்து ஒருவரது உடலை பாதுகாத்திடும்.
  • ரோஜா ஆப்பிளானது, மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கு நல்ல தீர்வினை வழங்கும்.
  • ரோஜா ஆப்பிளில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், அவை உடலை நோய் தொற்றுகளில் இருந்து காத்திடும். அதுமட்டுமின்றி. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கிடும்.
  • நார்ச்சத்தை தன்னுள் அதிகமாக கொண்டுள்ள ரோஜா ஆப்பிள் வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமானப் பாதையில் உள்ள சிக்கல்களை நீக்கவும் இவை உதவக்கூடியது.
  • சிறுநீர்ப்பை நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கும்.
  • நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களின் நச்சுத்தன்மைகளை நீக்கும்.
  • கர்ப்ப காலத்தில் நீரிழப்புகளை தவிர்க்க முடியும்.
  • சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க மற்றும் சரும சுரப்பு உற்பத்தியை ஒழுங்குபடுத்த உதவுகின்றது.
  • முகப்பருக்களுக்கு சிகிச்சையளிக்களிக்கின்றது.
  • புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவி புரிகின்றது.
  • வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்குகின்றது.
  • எலும்புகளை பலப்படுத்த உதவி புரிகின்றது.
  • கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
  • மெலிந்த முடி, வழுக்கை பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உதவிடுகிறது.
பக்கவிளைவு என்ன?

ரோஜா ஆப்பிளின் விதைகள், இலைகள் மற்றும் வேர் ஆகியவற்றில் ப்ருசிக் அமிலம் அல்லது சயனைடு அதிகமாக உள்ளது. இவை அதிகமாக உடலில் சேரும் பட்சத்தில் அதிகப்படியான ஆபத்து ஏற்படும்.