படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட மாஸ்டர் பட நாயகி..

பட்டம் போலே என்ற மலையாளப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதன்பின் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த மாளவிகா சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.

இப்படத்தின் மூலம் பிரபலமான மாளவிகா நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு முழுமையாக முடிந்து படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

இதை போக்க நடிகை மாளவிகா சமுகவலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் கொரானா லாக்டவுனால் வீட்டிலேயே இருக்கும் மாளவிகா சமீபத்தில் படுக்கையறை புகைப்படத்தினை வெளியிட்டு சர்ச்சையான பதிவினை பகிர்ந்துள்ளார்.

51 நாட்களாக லாக்டவுனில் என்னை போல யாரெல்லாம் படுக்கையறையே கதியென இருந்தீர்கள் கையை தூக்குங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதை சிலர் தவறாக எண்ணி மோசமாக பதிலளித்து வருகிறார்கள்.