தென்னிந்திய சினிமாவில் 90களில் வெளியான ஜெமினி, அன்பே சிவம், வின்னர், சிட்டிசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கிரண் ரத்தூட். இப்படங்களில் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தார். உடல் எடை வயதாக வயதாக அதிகமானதால் படவாய்ப்பினை இழந்தார்.
பாலிவுட்டிலும் படவாய்ப்பு கிடைக்காமல் சில ஆண்டுகளாக விலகி இருந்துள்ளார். அதன்பிறகு அம்மா கதாபாத்திரங்களில் நடித்து மாப்பிள்ளை, முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் நடித்து மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். தற்போது லாக்டவுன் என்பதால் தன் வீட்டிலேயே தனிமையில் இருந்து டிக்டாக் வீடியோவில் கவர்ச்சியாக உடல் அங்கங்கள் மொத்தமும் தெரியும்படியாக குத்தாட்டம் போட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி படுமோசமான கமெண்ட்களை கூறி வருகிறார்கள்.