வனிதா பற்றி அவரது மகளின் மிக உருக்கமான பதிவு!…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆயிரம் விமர்சனங்களை சந்தித்தாலும் தைரியமான பெண் எனபலராலும் போற்றப்பட்டவர் வனிதா.

பிக்பாஸ் முடிந்த பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றார்.

தற்போது தனியாக யூடியூப் சேனலை தொடங்கி சமையலில் கலக்கிவரும் வனிதாவுக்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.

இந்நிலையில் வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமாக பதிவை போட்டுள்ளார்.

அதில், இந்த அழகான வாழ்க்கையை கொடுத்ததற்காக என்னுடைய அம்மாவிற்கு நன்றி கூற விரும்புகிறேன்.

அவரை எந்த நிபந்தனையும் இல்லாமல் ஆதரிக்கிறேன், அன்பு செலுத்துகிறேன்.

என் அம்மா (வனிதா)வை பிடிக்காதவர்கள் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள், நான் அவரது அருகில் இருந்து அவரை தூக்கி விடுவேன். ஒவ்வொரு குழந்தையும் அம்மாவிற்கு அதை செய்யவேண்டும்.

அம்மா நீங்கள் வருத்தப்படாதீர்கள், எது நடந்தாலும் நான் உங்களுடன் இருப்பேன், நீங்கள் இரும்பு போன்றும், இந்த வாழ்க்கை சுத்தியல் போலவும் இருக்கிறது.

எப்போதும் போன்று மன வலிமையுடன் இருங்கள்… லவ் யூ அம்மா என பதிவிட்டுள்ளார்.

இதற்கு அன்பால் நெஞ்சை கிழிப்பது போன்று உள்ளது என பதிலளித்துள்ளார் வனிதா.