தமிழ் சினிமாவில் அறிந்தும், அறியாமலும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஆர்யா. பின்பு தனக்கென்று ஏகப்பட்பட்ட ரசிகர் பட்டாளத்தினை வைத்துள்ளார்.
ஆர்யா ஆரம்பத்தில் திருமணத்தினை தள்ளிப்போட்டுக்கொண்டிருந்த வேளையில், இவரது பெற்றோர் ஆர்யாவின் தம்பியும், நடிகருமான சத்தியாவிற்கு முதலில் திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு எடுத்து திருமணம் நடத்தி வைத்தனர்.
சத்தியா அவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பாவனா என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவர்கள் இருவரும் கல்லூரி நாட்களில் இருந்தே காதலித்து வந்துள்ளனர் என கூறப்படுகிறது.
இந்நலையில் ஆர்யாவின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் ஆர்யாவின் தம்பி சத்யா அச்சு அசல் ஆர்யாவின் உடலமைப்பைக் கொண்டுள்ளதையும் காணலாம்.