பெற்ற குழந்தையை கயிறு கட்டி இழுத்துச்செல்லும் தாய்..!!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், வெளியூரில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாததால் தற்போது கால்நடையாக தங்களது மாநிலத்திற்கு செல்கின்றனர்.

சமீபத்தில் பல காணொளிகள் வெளியாகி நெஞ்சை உறைய வைத்த நிலையில், தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் உபிக்கு நடந்து செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நடக்க முடியாத குழந்தையை வேறு வழியின்றி பெட்டியில் கயித்தை கட்டி இழுத்து செல்லும் தாயின் புகைப்படமே இதுவாகும்.