ஆப்பிள் மொபைல் சாதன பயன்பாட்டாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் அவற்றிற்கான அப்பிளிக்கேஷன்களை ஆப்ஸ் ஸ்டோரிலிருந்தே தரவிறக்கம் செய்ய வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.

இதற்காக மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய ஆப்ஸ் ஸ்டோர் அப்பிளிக்கேஷனும் காணப்படுகின்றது.

குறித்த ஆப்ஸ் ஸ்டோர் அப்பிளிக்கேஷனில் தற்போது Dark Mode வசதி தரப்பட்டுள்ளது.

இவ் வசதியினை ஐபோன் மற்றும் ஐபேட் போன்ற சாதனங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் ஆப் ஸ்டோரின் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலமே இவ் வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.