தற்போதைய கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.
இதற்கு தீர்வாக க்ளவுட் கணினி முறைகள், வீடியோ கொன்பரன்ஸ் வசதிகள் போன்றன பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
இப்படியான நிலையில் உலகின் முன்னணி வேலைதேடல் வசதியை தரும் LinkedIn சமூகவலைத்தளமானது புதிய வசதியினை அறிமுகம் செய்கின்றது.
இதன் மூலம் Virtual நிகழ்வுகளை நடாத்தமுடிவதுடன், நிறுவனங்கள் நிகழ்நிலை முறையில் தொடர்புகளை ஏற்படுத்த முடியும்.
அத்துடன் நேரடி ஒளிபரப்பு முறையில் நிகழ்வுகளை நடாத்தும் வசதியும் இதனூடாக வழங்கப்படவுள்ளது.
குறித்த வசதிகள் LinkedIn Live மற்றும் LinkedIn Events என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.