வீடியோ கொன்பரன்ஸ் வசதியை இலவசமாக தரும் கூகுள்

தற்போது உலகளாவிய ரீதியில் எதிர்நோக்கப்பட்டுவரும் இக்கட்டான சூழ்நிலையில் வீடியோ அழைப்பு வசதியை தரும் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு புதிய சலுகைகள் மற்றும் வசதிகளை பயனர்களுக்கு அளித்துவருகின்றன.

இவற்றின் வரிசையில் Google Meet ஊடாக இலவச வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதியை தரவுள்ளதாக கூகுள் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் அறிவித்திருந்தது.

இதன்படி குறித்த வசதி தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை குறித்த வசதியை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://meet.google.com/ எனும் தளத்திற்கு சென்று Sign Up செய்வதன் ஊடாக மக்கள் இவ் வசதியினைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஏற்கணவே இலவசமாக 100 பேர் வரையில் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாகவும், G Suite வாடிக்கையாளர்கள் 250 பேர் வரையில் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்ததுடன் 60 நிமிடங்கள் வரையே குறித்த அழைப்புக்கள் செல்லுபடியானதாக காணப்பட்டது.

எனினும் எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை இக் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது.