கூகுளின் RCS குறுஞ்செய்தி சேவையில் ஐபோனில் உள்ள வசதி விரைவில்

கூகுள் நிறுவனமானது ஐபோனில் தரப்பட்டுள்ள iMessages சேவையைப் போன்று RCS (Rich Communication Services) எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே.

இச் சேவையில் தற்போது ஆப்பிள் சாதனங்களில் உள்ள மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்வதற்கு கூகுள் திட்டமிட்டுள்ளது.

இதன்படி ஈமோஜி வசதியினை புதிதாக அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே அன்ரோயிட் பயனர்கள் எழுத்துருக்கள், படங்கள், GIF கோப்புக்கள், ஈமோஜி, ஸ்டிக்கர், வீடியோக்கள் மற்றும் ஆடியோ என்பவற்றினை பெற்றுக்கொள்ளவோ அல்லது அனுப்பவோ முடியும்.

இவ் வசதியானது ஏற்கணவே சில பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இவ் வசதி கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.