புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபையினர் வேண்டுகோள்!

உலகெங்கும் நிலவும் இக்கட்டான சூழலில் வாழும் எம் உறவுகளும், கண்ணகை அம்பாளின் அடியார்களும் நலமோடு வாழ அம்பாளின் அருள் நிறையட்டும்.
கண்ணகை அம்மனின் திருப்பணிவேலைகள் சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில், ஏற்பட்ட கொரோனாத்தொற்று காரணமாக திருப்ணி வேலைகள் இடைநிறுத்தப்பட்டது.

தற்போது நிலமை படிப்படியாக இயல்புநிலைக்குத் திரும்புவதால் நாம் மீண்டும் திருப்பணி வேலைகளைத் தொடங்கவுள்ளோம்.

ஏற்கனவே அம்பாளின் அடியார்கள்களுடன் தனிப்பட்ட முறையில் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் நிர்வாகத்தினர் கலந்துரையாடியிருந்தனர்.
அடியார்களும் திருப்பணிக்கான நிதிப்பங்களிப்பினை வழங்குவதாக உறுதியளித்திருந்தனர்.

இந்த இக்கட்டான சூழலில் மீண்டும் தொலைபேசி வாயிலாக ஒவ்வொருவரையும் அழைத்து சங்கடப்படுத்துவதை நிர்வாகம் விரும்பவில்லை.

அதேநேரம் திருப்பணி வேலைகளையும் முடிக்கவேண்டிய கட்டாயத்தில் நிர்வாகம் இருப்பதால், ஏற்கனவே உறுதியளித்தவர்களும், பகுதியாக நிதியளித்தவர்களும் முடிந்தவரை முன்வந்து பங்களித்து திருப்பணிவேலைகளை விரைவுபடுத்தி முடிக்க உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

-ஆலய பரிபாலன சபையினர்.