தமிழில் பிரபுதேவாவின் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்த நடிகை ஷில்பா ஷெட்டி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது ஏன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி-ராஜ் குந்த்ரா தம்பதியினர் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி வாடகைத் தாய் மூலம் இரண்டாவது பெண் குழந்தை பெற்றுக்கொண்டனர்.
இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வாடகைத் தாய் மூலம் ஏன் குழந்தை பெற்றேன் என்பது பற்றி நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.
அதுபற்றி அவர் கூறியதாவது,
என் மகன் வியானுக்குப் பிறகு இன்னொரு குழந்தையை பெற்றுக் கொள்ள விரும்பினேன். அவன் தனியாக வளர்வதை விரும்பவில்லை.
அதனால் குழந்தை பெறத் தயாரானேன். இரு முறை கருத்தரித்தேன். ஆனால், எனக்கிருந்த ஆரோக்கிய குறைபாடு காரணமாகக் கருச்சிதைவு ஏற்பட்டது.
இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டதால், மீண்டும் குழந்தை பிறப்பது கஷ்டம் என்று உணர்ந்தேன்.
அதனால் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று யோசித்தேன். அந்த நடைமுறையில் பல சிக்கல்கள் இருந்தன. இதற்காக 4 வருடங்கள் காத்திருந்தேன். அதுவும் சரியாக அமையவில்லை. அதனால் அந்த முடிவை கைவிட்டேன்.
இதனால் வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் முடிவுக்கு வந்தேன். எனது கணவரும் இந்த முடிவை ஏற்றுக் கொண்டார். இவ்வாறு நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.
அது மாத்திரம் இன்றி குழந்தைகளின் புகைப்படத்தினை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.