கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் முதல் கட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாக மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால், மூன்றாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முறை மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடிவடைகிறது. மீண்டும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
3ம் கட்ட ஊரடங்கு 2 நாட்களில் நிறைவடையும் நிலையில், முதலமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. தொழில் கூட்டமைப்பினருடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.
தொழில் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது தொடர்பாக கருத்து கேட்க உள்ளனர். இன்று மாலை 5.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்கிறார்.
நேற்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று தொழில்துறையினரிடம் கருத்து கேட்கிறார்.