நெற்றியில் மச்சங்கள் :
பெண்களுக்கு நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவர்கள் நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும் செல்வந்தர் ஒருவருக்கு மனைவியாவார்கள். மேலும், ஆடம்பரமாய் வாழ்வார்கள்.
விசாலமான நெற்றியில் மச்சம் :
நெற்றி விசாலமாய் அமைந்திருந்து அதில் மச்சம் இருந்தால் அவர்கள் வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாலும் அடிக்கடி பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.
அவர்களிடம் சாமர்த்தியமும், பொறுமையும் நிறைந்திருக்கும். எத்தகைய நெருக்கடிகளையும் எளிதாய் சமாளித்து விடுவார்கள். குடும்ப ரகசியங்களை வெளியிடாமல் பாதுகாப்பார்கள்.
நெற்றியில் இடப்பக்கம் மச்சம் :
பெண்களுக்கு நெற்றியில் இடப்பக்கம் மச்சம் இருந்தால் மன உறுதி நிறைந்தவர்கள். அதனால் எல்லா வகையான துன்பங்களையும் பொறுமையாய் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அவர்கள் புகுந்த வீடு வசதி நிறைந்ததாய் இருக்கும். அவர்கள் பட்ட துன்பங்களுக்கெல்லாம் விடிவு காலம் பிறக்கும். வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வார்கள்.
நெற்றியின் இடது புறம் மச்சம் உள்ள ஆண்களுக்கு வசதியான வாழ்க்கை அமையும்.
நெற்றியில் வலப்பக்கம் மச்சம் :
பெண்களுக்கு நெற்றியில் வலப்பக்கம் மச்சம் இருந்தால் அவர்கள் கணவனுக்கு அடங்கிய மனைவியாய் நடந்து கொள்வார்கள். மிகுந்த அடக்கத்துடன் காணப்படுவார்கள். அவர்களுடைய பேச்சிலும், செயலிலும் கண்ணியம் நிறைந்திருக்கும்.
நெற்றியின் வலது புறம் மச்சம் உள்ள ஆண்களுக்கு திடீர் தனயோகம், திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.