பிரபல நகைச்சுவை நடிகர் மைக்கேல் மது மாரடைப்பால் தனது 51வது வயதில் காலமானார்.
கன்னடத்தில் 300 திரைப்படங்களில் நடித்துள்ளவர் மைக்கேல் மது.
சூர்ய வம்சா, ஏகே47, நீலாம்பரி போன்ற திரைப்படங்களில் மதுவின் நடிப்புக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் மது நேற்று தனது வீட்டில் திடீரென சுருண்டு விழுந்தார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுவுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலேயே அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரின் திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆனாலும் கொரோனா ஊரடங்கால் பெரும்பாலான சினிமா பிரபலங்கள் மதுவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.