உலகத்தை பேராபத்தில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் கிரகங்களின் சஞ்சாராத்தால் மனிதர்களுக்கு சில நன்மை தீமையும் ஏற்படும்.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனிபகவான் இந்த மாதம் 11 ஆம் தேதி முதல் வக்ரமடையத் தொடங்கி செப்டம்பர் 29ஆம் தேதி வரை வக்ர நிலையில் சஞ்சரிப்பார்.
இந்த வக்ர சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். பணக்கஷ்டம் நீங்கும்.
சனிபகவான் மெதுவாக நகரும் கிரகம். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் தங்கியிருந்து பலன்கள் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கிரகம் சனி.
சனியின் வக்ர சஞ்சாரத்தினால் அடுத்த 4 மாதத்திற்கு 12 ராசிக்காரர்களுக்கு என்னென்ன அதிர்ஷ்டங்கள், கஷ்டங்கள் ஏற்படப்போகுதுன்னு பார்க்கலாம்.
மேஷம்
- கொரோனா முடக்கத்தினால் வேலையில் பிரச்சினை ஏற்பட்டு நிம்மதி இழந்திருந்த நீங்கள் இனி நிம்மதி பெருமூச்சு விடுவீங்க.
- கணவன் மனைவி உறவில் நெருக்கம் கூடும். புதிய தொழில், வியாபாரம் தொடங்குவீர்கள். வாங்கிய கடன்களை திரும்ப செலுத்துவீர்கள்.
- மாணவர்களுக்கு தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியம் சீராகும்.
ரிஷபம்
- ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். எதிர்காலம் பற்றி பயத்தை காட்டி விடுவார் சனிபகவான்.
- கொரோனா பிரச்சினையால் தொழில் நஷ்டமாகி கடன் வாங்கும் நிலைக்கு போயிருந்த உங்களுக்கு சில நன்மைகள் நடைபெறும்.
மிதுனம்
- மிதுனம் ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர சஞ்சாரத்தினால் குடும்ப வாழ்க்கையில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம்.
- கணவன் மனைவி இடையே பேச்சுவார்த்தையில் கவனமாக இருக்க வேண்டிய காலமிது.
- மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் மட்டுமே தேர்வுகளை நன்றாக எதிர்கொள்ள முடியும்.
கடகம்
- கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த 4 மாதங்களும் சந்தோஷமான காலகட்டமாக அமையும்.
- தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும் நிதி நெருக்கடிகள் நீங்கும்.
- படிக்கும் மாணவர்களுக்கு இது நல்ல காலகட்டம் நன்றாக படித்து தேர்வுகளை எழுதுங்கள்.
- கணவன் மனைவி இடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும்.
சிம்மம்
- சிம்மம் ராசிக்காரர்களே, கணவன் மனைவி இடையே ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் தீரும்.
- சிலருக்கு திடீர் பண வருமானமும் வரும். வம்பு வழக்குகளில் இருந்து வந்த பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
கன்னி
- கன்னி ராசிக்காரர்களே, உங்களுக்கு வேலையில் இருந்த முடக்கம் விலகும்.
- சனியின் வக்ர சஞ்சார காலமான 4 மாதங்களும் உங்களுக்கு வருமானம் நன்றாக இருக்கும்.
- மாணவர்கள் நன்றாக படித்தால் மட்டுமே தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்.
துலாம்
- துலாம் ராசிக்காரர்களே, இது நல்ல காலகட்டம். நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் கடன் வாங்கி கொடுக்காதீங்க.
- குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும்.
- உயர்கல்வி யோகம் கைகூடி வரப்போகிறது மாணவர்களை தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.
விருச்சிகம்
- விருச்சிகம் ராசிக்காரர்களே, உங்களுக்கு சனியின் வக்ர சஞ்சாரத்தினால் நிறைய சந்தோஷங்கள் வரும். உங்களின் பணவரவு நன்றாக இருக்கும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும்.
- எந்த காரணத்திற்காகவும் கடன் வாங்காதீங்க.
- படிப்பில் அக்கறையோடு இருந்தால் மட்டுமே மாணவர்களை தேர்வுகளை நன்றாக எதிர்கொள்ள முடியும்.
தனுசு
- தனுசு ராசிக்காரர்களே, உங்களுக்கு சனியின் வக்ர சஞ்சாரத்தினால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாகவும் அக்கறையாகவும் இருக்க வேண்டும்.
- குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் அவ்வப்போது வந்து போகும்.
- மாணவர்களுக்கு மறதி வரலாம் கவனமாக படிக்கவும்.
- புதிய பிசினஸில் பெரிதாக பண முதலீடு எதுவும் செய்ய வேண்டாம்.
மகரம்
- மகரம் ராசிக்காரர்களே, உங்க ராசி அதிபதி சனி உங்களுக்கு நன்மைதான் செய்வார். ஆனால் சிலருக்கு நிதி நெருக்கடிகள் வரும்.
- புது வேலை எதுவும் வேண்டாம் இருக்கிற வேலையை தெளிவாக கவனமாக செய்யுங்க.
- பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள்.
கும்பம்
- கும்பம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த சனி வக்ர சஞ்சாரத்தினால் விரைய செலவுகள் குறையும்.
- உங்களோட உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
- கொரோனா லாக் டவுன் காலத்தில் சொந்த பந்தங்களுடன் கூடியிருக்கும் நீங்கள் உற்சாக மனநிலையில் இருப்பீர்கள்.
மீனம்
- மீனம் ராசிக்காரர்களே, உங்களுக்கு பணவருமானம் வரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- உங்க தன்னம்பிக்கை அதிகரிக்கும். இனி கொஞ்ச நாளைக்கு பெரிய அளவில முதலீடு எதுவும் செய்யாதீங்க.
- மாணவர்கள் படிப்பில அக்கறை காட்டுங்க கவனமாக படித்தால் மட்டுமே தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்.