பிரபல இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அருண் பிரசாத் இன்று சாலை விபத்தில் மரணமடைந்தார்.
கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வெங்கடாச்சலம்- மீனாட்சி, இவர்களது மகன் அருண் பிரசாத், இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் இயக்குநர் ஷங்கரிடம் `ஐ’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
தற்போது ஜி.வி பிரகாஷ் ஹீரோவாக நடிச்சிருந்த ‘4 ஜி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்நிலையில், இன்று காலை மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூருக்கு வந்து கொண்டிருந்த போது, ஜடையம்பாளையம் மார்க்கெட் பகுதியில் டிம்பர் லொறி மீது விபத்துக்குள்ளானது.
இதில், அருண் பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிசார் லொறி ஓட்டுனரை கைது செய்துள்ளனர்.