உயிரை பணயம் வைத்து ரயில் பெட்டி இணைப்பில் குழந்தையுடன் பயணிக்கும் பெண்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

அவர்களை ரயில்களின் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், பலரும் நடந்தே சொந்த ஊர்களுக்கு செல்லும் அவலம் நிகழ்ந்து வருகின்றது.

இந்நிலையில், ஊரடங்கால் ஒரு தாய் தன் குழந்தையுடன் உயிரை பணையம் வைத்து ரயிலில் சொந்த ஊருக்கு செல்வதாக கீழ்காணும் வீடியோ இந்திய அளவில் வைரலாகி வருகிறது.

உண்மை தன்மையை ஆராய்ந்து பார்த்தால் குறித்த காணொளி கடந்த 2016-க்கு முன்பிருந்தே வைரலாகி இருக்கிறது.

அந்த வீடியோவில் இருக்கும் ரயில் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல, பங்களாதேஷ் நாட்டில் உள்ள ரயிலை போன்று இருப்பதையும் அறிய முடிகிறது.