கொரோனாவால் தேசிய அளவில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் முழுமையாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் படப்பிடிப்புகள் நடத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது.
வேலையை இழந்து வறுமையில் வாடிய சினிமா கலைஞர்களுக்கு நடிகர்கள், நடிகைகள் பலரும் உதவி செய்தனர்.
காமெடி நடிகரும், முன்னாள் துணை அமைச்சருமான ஐசரின் வேலனின் 33 வது நினைவு நாளை முன்னிட்டு அவரின் மகனும் நடிகருமான ஐசரி கணேஷ் நலிந்த நாடக கலைஞர்களுக்கு நிவாரண நிதி உதவி அளித்துள்ளார்.
இதன் மூலம் ரூ 25 லட்சம் நிதியுதி அளிக்கப்பட்ட்டுள்ளது.
2500 நாடக கலைஞர்களின் வங்கி கணக்கில் தலா 1000 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே அவர் நாடக நடிகர்களுக்காக ரூ 10 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.